தேவசகாயம் மவுண்டில் புனித தேவசகாயம் புனிதர் பட்டம் பெற்ற ஆண்டு விழா 3 நாட்கள் நடக்கிறது!!
தேவசகாயம் கடந்த ஆண்டு மே மாதம் 15-ந் தேதி புனிதராக உயர்த்தப்பட்டார். அதன் முதலாம் ஆண்டு நிறைவு விழா தேவசகாயம் மவுண்டில் நேற்று தொடங்கியது. நேற்று மாலையில் ஜெபமாலை, புகழ்மாலை, மாலை ஆராதனை போன்றவை நடந்தது. விழாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு திருப்பலி, 8 மணிக்கு புனித மிக்கேல் அதிதூதர் கெபி அடிக்கல் நாட்டு விழா, மாலை 5 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, 5.30 மணிக்கு மலை வலம் வழிபாடு, சிறப்பு நற்கருணை ஆசீர் போன்றவை நடக்கிறது. நாளை (திங்கட்கிழமை) காலை 7 மணி தேவா மருத்துவமனை அருகில் திருப்பலி, 8 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் தேவா மருத்துவமனை திறப்பு மற்றும் அர்ச்சிப்பு, தொடர்ந்து மன்னா வீடு திறப்பு, அர்ச்சிப்பு நடக்கிறது.
இரவு 7 மணிக்கு புனிதர் பட்ட ஓராண்டு நிறைவு நன்றி திருப்பலி நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை தேவசகாயம் மவுண்ட் திருத்தல அதிபர் சேவியர் பிரான்சிஸ், பங்குத்தந்தை பிரைட், துணை பங்குத் தந்தை ரெக்வின், பங்கு பேரவை துணைத்தலைவர், சிலுவைதாசன், செயலாளர் தேவசகாய டேவிட், பொருளாளர் மற்றும் கவுன்சிலர் ஜெனட் சதீஷ்குமார், துணைசெயலாளர் சகாய செலின், மற்றும் பங்கு அருட்பணி பேரவையினர், பங்குமக்கள் செய்துள்ளனர்.