;
Athirady Tamil News

இளம்பெண் தீக்குளிப்பதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட சகோதரன்- உபி போலீசார் விசாரணை!!

0

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்லால் யாதவ். இவரது மகள் சரோஜ் யாதவ் (வயது 31). இவர்களுக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த பவன்குப்தா என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் பவன்குமாரின் குடும்பத்தினருக்கும், சுந்தர்லால் குடும்பத்தினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் சரோஜ்யாதவை விசாரணைக்கு அழைத்துள்ளனர். இதனால் மனம் உடைந்த சரோஜ்யாதவ் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தனக்கு தானே தீ வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் அலறித்துடித்துள்ளார்.

இந்நிலையில் சரோஜ் யாதவின் சகோதரர் சஞ்சீவ் யாதவ், தீக்குளித்த தனது சகோதரியை காப்பாற்றுவதற்கு பதிலாக அவர் தீப்பற்றி எரிவதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த காட்சிகள் வைரலாக பரவியது. இதற்கிடையே தீக்குளித்த சரோஜ்யாதவை குடும்பத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு கவலைக்கிடமான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீசாருக்கு சில சி.சி.டி.வி. காட்சிகள் கிடைத்துள்ளது. அதன் மூலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.