உத்தரபிரதேசத்தில் 40 குரங்குகள் விஷம் வைத்து கொலை !!
உத்தரபிரசேத மாநிலம் ஹபூர் அருகே உள்ள ஹர்முக்தேஸ்வர் வனப்பகுதியில் நேற்று 40 குரங்குகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இது பற்றி அறிந்ததும் வனத்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் தண்ணீர் பழங்கள் மற்றும் வெல்லம் கிடந்தது.
இதில் விஷம் கலந்து கொடுத்து குரங்குகள் கொல்லப்பட்டு இருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகம் அடைந்துள்ளனர். இறந்த குரங்குகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. பரிசோதனை முடிவில் தான் குரங்குகள் எப்படி இறந்தது? என்பது தெரியவரும். கைப்பற்றப்பட்ட தண்ணீர் பழங்கள், வெல்லம் ஆகியவைகளும் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.