;
Athirady Tamil News

கரும்புள்ளிகள் தொல்லையிலிருந்து இனி கவலையில்லை !! (மருத்துவம்)

0

மூக்கை சுற்றியுள்ள இடங்களில் இந்த கரும்புள்ளிகள் அதிக தொல்லை கொடுக்கும். அவற்றை நீக்காவிட்டால் நீண்ட காலம் முகத்தில் தங்கி அழகைக் கெடுத்துவிடுஜகின்ன. சரியான முகப் பராமரிப்பு இல்லாததன் காரணமாக தான், இவைகள் வர வழியேற்படுகின்றன. இதனை சரி செய்ய நம் வீட்டிலேயே தீர்வு இருக்கிறது.

பேக்கிங் சோடாவில் ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி ஃபங்கல் தன்மை உள்ளது. மேலும் இது ஸ்கின் பராமரிப்புக்கு ஏற்றது. சமையல் சோடா மற்றும் ஓட்ஸ் சம அளவு எடுத்து, அதனுடன் சிறிது தண்ணீர் கலந்து பேஸ்டாக்கி, கரும்புள்ளிகள் இருக்கும் பகுதிகளில் அப்ளை செய்து மெதுவாக மசாஜ் செய்யுங்கள். பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் அதை கழுவவும். இதை ஒரு வாரத்தில் இரண்டு முறை செய்து வர சீக்கிரமே கருமை மறையும்.

அதுபோல இலவங்கப் பட்டைக்கு அதிகளவு ஆன்டி பாக்டீரியல் தன்மை உள்ளதால், இது இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. 2 தேக்கரண்டி பட்டை பொடி, ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறுடன் சிறிது தண்ணீர் கலந்து பாதிக்கப்பட்ட இடங்களில் பூச செய்யுங்கள். பிறகு15 நிமிடங்கள் கழித்து கழுவும். இதை தினசரி செய்துவந்தால் நல்ல மாற்றத்தை உணரமுடியும்.

சர்க்கரை ஒரு அருமையான ஸ்கிரப்பான பயன்படுகிறது. தேன் அழுக்கை அகற்றி தோலுக்கு ஈரப்பதத்தை தருகிறது. 3 தேக்கரண்டி சர்க்கரையுடன் ஒரு தேக்கரண்டி தேனை சேர்க்கவும். அதை மெதுவாக மசாஜ் செய்து பின் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவவும்.

முட்டையின் வெள்ளைக் கரு தோலை இறுக்கமாக்கும். அதோடு சருமத்தில் உள்ள அழுக்கை நீக்க உதவுகிறது. முகத்திற்கு இது ஒரு சிறந்த ஃபேஸ் பேக். ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதியில் நன்கு அப்ளை செய்து மசாஜ் செய்யுங்கள். பிறகு சுத்தமாக கழுவினால் கரும்புள்ளிகள் மறைந்து சருமம் பளபளக்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.