ரஷ்யாவை முடக்கும் முயற்சியில் ஐரோப்பிய தலைவர்கள்! !!
உக்ரைனில் நடந்த போர்க்குற்றங்களுக்கு ரஷ்யாவை பொறுப்புக்கூற வைக்கும் முயற்சியில் ஐரோப்பிய தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பா ஒன்றியத்தின் குறித்த கூட்டத்திற்காக ஐரோப்பிய தலைவர்கள் இந்த வாரம் ஐஸ்லாந்தில் கூடுகின்றனர்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஆரம்பிக்கப்பட்ட மனித உரிமைகள் தொடர்பிலான குறித்த அமைப்பு, உக்ரைனுக்கான தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தவும், பரவலான மனித உரிமை மீறல்களுக்கு உறுதியான தொனியை அமைக்கவும் ரெய்க்ஜாவிக் நகரில் இரண்டு நாள் உச்சிமாநாடு கூடவுள்ளது.
உக்ரைனின் அதிபர் ஜெலென்ஸ்கி வார இறுதியில் முக்கிய ஐரோப்பிய தலைவர்களுடன் மேற்கொள்ளவுள்ள பேச்சுவார்த்தைகள் மூலம் கூட்டணிகளை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கூட்டத்தொடரில் பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் நாட்டு அரச தலைவர்கள் உள்ளிட்ட 46 உறுப்பினர்கள் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.