அமெரிக்காவின் அறிக்கையை எதிர்க்கும் இந்தியா..! !
சர்வதேச மத சுதந்திரம் என்ற தலைப்பில் கடந்த ஆண்டிற்கான அறிக்கையை அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டிருந்தது.
அதில், இந்தியாவில் உள்ள சில மாநிலங்களில் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து அடக்குமுறை இருந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மத சுதந்திர மீறல்களில் ஈடுபட்டுள்ள இந்திய அரசு அமைப்புகள் மற்றும் அதிகாரிகள் மீது பொருளாதார தடை உள்ளிட்டவை குறித்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி,
அமெரிக்காவின் அறிக்கை, தவறான தகவல் மற்றும் தவறான புரிதலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை, சில அமெரிக்க அதிகாரிகளின் உந்துதல் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.
இது ஒருதலைப்பட்சமான அறிக்கை. அந்த அறிக்கையின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது.” என தெரிவித்துள்ளார்.