;
Athirady Tamil News

பொன்னம்பலமேட்டில் அத்துமீறி நுழைந்து பூஜை செய்த விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது !!

0

கேரள மாநிலம் சபரிமலையில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவில் உள்ளது. சபரிமலையில் மகர விளக்கு திருவிழா நடைபெறும்போது, மலையில் உள்ள பொன்னம்பலமேட்டில் ஐயப்பன் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பார். இந்த வனபகுதி வனத்துறையினரால் தடை செய்யப்பட்ட பகுதியாகும். கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த ஒருவர் பொன்னம்பலமேடு காட்டுப்பகுதிக்குள் சென்று பூஜைகள் செய்தார். இந்த காட்சிகளை சிலர் சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். அது வைரலானதை தொடர்ந்து, பொன்னம்பலமேட்டில் அத்துமீறி நுழைந்து பூஜைகள் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி திருவிதாங்கூர் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபோல கேரள வனத்துறையினரும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

இதில் பொன்னம்பலமேட்டிற்குள் செல்ல பூசாரிக்கு உதவிய வனத்துறை ஊழியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில் இந்த வழக்கில் இடுக்கியை சேர்ந்த சந்திரசேகரன் என்ற கண்ணன் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கேரள போலீசார் இன்று காலை அவரை கைது செய்தனர். அவரிடமும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.