உரிமையாளர் இன்றி தவம் கிடக்கும் லொட்டரி டிக்கட் – அடுத்த மாதம் முடிவு திகதி!
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்ற ஒருவர் இதுவரையில் உரிமை கோரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டு வடக்கு ஒன்றாரியோவில் இந்த லொத்தர் சீட்டி விற்பனை செய்யப்பட்டுள்ளது. லீடர் லேக் பகுதியில் இந்த டிக்கட் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
1, 2, 6, 7, 8, 38 மற்றும் 50 இலக்கங்களே இந்த வெற்றியிலக்கங்களாகும். எதிர்வரும் ஜூன் மாதம் 7ம் திகதி இந்த டிக்கட் காலாவதியாக உள்ளது.
டிக்கட்டின் உரிமையாளர்கள் உடனடியாக லொத்தர் சீட்டு நிறுவனத்தை தொடர்பு கொண்டு பணப் பரிசினை வென்றெடுக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.