“நாட்டுப் பற்றாளர்” அமரர்.மாதர் செல்லத்துரை அவர்களின் நினைவாக விசேட உணவு வழங்கல்.. (படங்கள், வீடியோ)
“நாட்டுப் பற்றாளர்” அமரர்.மாதர் செல்லத்துரை அவர்களின் நினைவாக விசேட உணவு வழங்கல்.. (படங்கள், வீடியோ)
“நாட்டுப் பற்றாளர்” அமரர்.மாதர் செல்லத்துரை அவர்களின் நினைவாக அவரது இன்றைய பதினேழாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு விசேட மதியஉணவு வழங்கப்பட்டது..
யாழ் .அச்சுவேலியைச் சேர்ந்த “நாட்டுப் பற்றாளர்” அமரர்.மாதர் செல்லத்துரை அவர்களின் பதினேழாவது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு, அன்னாரின் மனைவி திருமதி. மாதர் செல்லத்துரை இராஜேஸ்வரி, மக்களான அமரர்.கேதீஸ்வரன், அமரர். ஜெகதீஸ்வரன், கேமேஸ்வரி (சுவிஸ்), ஜீவாகரன் (லண்டன்) ஞானகரன் (லண்டன்) மற்றும் மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப் பிள்ளைகள் சார்பாக
யாழ் அச்சுவேலியில் பிறந்து சுவிஸ் நாட்டில் பேர்ண் மாநில தூண் பிரதேசத்தில் வதியும் திருமதி. கேமேஸ்வரி சுபாஸ்கரன் (ராஜு) அவர்கள் வழங்கிய நிதிப்பங்களிப்பில் மேற்படி விசேட அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேவேளை யாழ் .அச்சுவேலியைச் சேர்ந்தவர்களும் சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் தூண் பிரதேசத்தில் வசிப்பவர்களுமான திருமதி கேமேஸ்வரி சுபாஸ்கரன் (ராஜு) அவர்கள் தனது தந்தையாரான ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்ட “நாட்டுப் பற்றாளர்” அமரர்.மாதர் செல்லத்துரை அவர்களின் நினைவாக அவரது இன்றைய பதினேழாவது ஆண்டு தினத்தை முன்னிட்டு விசேட மதிய உணவினை அவரது அச்சுவேலியில் உள்ள இல்லத்தில் அவரது குடும்ப உறவுகளால் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இன்றுமாலை வன்னி எல்லைக் கிராமமொன்றில் மாணிக்கதாசன் நற்பணி மன்றம் ஊடாக விசேட மதியஉணவு வழங்கி வைக்கப்பட்டது. தமிழ் தேசியத்தின் ஈடுபாட்டில் செயல்பட்ட காரணத்தினால் ஆயுததாரிகளினால் மரணித்த “நாட்டுப்பற்றாளர்” அமரர்.மாதர் செல்லத்துரை அவர்களின் “நினைவு நாள் நினைவாக” மேற்படி விசேட மதியஉணவு வழங்கி வைக்கப்பட்டது.
நாட்டுப் பற்றாளர் அமரர் மாதர் செல்லத்துரை அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு இன்று அவரது நினைவாக நிகழ்வில் அஞ்சலி செலுத்தி தொடர்ந்து தீபாரதனை காட்டப்பட்டு தேவார பாராயணம் பாடப்பட்டு நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து விசேட மதிய உணவும் வழங்கப்பட்டது
“மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” இன, மத, பிரதேச வேறுபாடுகளை மட்டுமல்ல அரசியல் வேறுபாடுகளையும் கடந்து நடுநிலைமையுடன் அனைத்து மக்களையும் வாழ்வாதாரத்தில் முன்னேறவும், மாணவ மாணவிகளின் கல்விக்கு கரம் கொடுக்கவும் வேண்டுமெனும் ஒரே நோக்கில் செயல்பட்டு “தடைகளைத் தகர்த்து சமூகத்தை உயர்த்து” எனும் குறிக்கோளில் செயலாற்றுவது நீங்கள் அறிந்ததே..
இதேவேளை தொடர்ந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தோடு நிதிப்பங்களிப்பு தந்து சமூகப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் திரு.திருமதி. சுபாஸ்கரன் (ராஜு) கேமேஸ்வரி தம்பதிகளுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் தாயக சொந்தங்களோடு இணைந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, இறையடி சேர்ந்த அமரர் மாதர் செல்லத்துரை அவர்களின் ஆத்மா சாந்தியடைய எந்நாளும் இறையவனை இறைஞ்சு வேண்டுகிறோம்.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
26.05.2023
“நாட்டுப் பற்றாளர்” அமரர்.மாதர் செல்லத்துரை அவர்களின் நினைவாக விசேட உணவு வழங்கல்.. (வீடியோ)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1
§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos