உலகப் புகழ்பெற்ற ஒசாகா கோட்டையை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார் !!
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு தற்போது ஜப்பானின் ஒசாகா மாகாணத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டுள்ளார்.
கட்டுமானம் மற்றும் சுரங்க உபகரணங்கள் தயாரிக்கும் பிரபல கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையைப் பார்வையிட்டார். இந்நிலையில், ஜப்பான் நாட்டின் உலகப் புகழ்பெற்ற ஒசாகா கோட்டையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். ஒசாகா மாகாணத்தின் துணை ஆளுநர் நோபுஹிகோ யமாகுஜியின் அழைப்பை ஏற்று முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.