பறவை மோதியதால் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிய விமானம்!!
நேபாள ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று நேற்று காத்மாண்டு நகரின் திருபுவன் விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்பட்டு சென்றது. நடுவானில் பறந்தபோது எதிர்பாராதவிதமாக ஒரு பறவை விமானம் மீது மோதியது. விமானத்தின் வலதுபுற இறக்கை சேதமடைந்தது. அதைத்தொடர்ந்து அந்த விமானம் திருபுவன் விமான நிலையத்திற்கு மீண்டும் திருப்பப்பட்டு பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. அந்த விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டனர். பின்னர் வேறு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.