ரஷ்ய எல்லை பாதுகாப்பை பலப்படுத்த புடின் உத்தரவு..!
உக்ரைன் தகைநகரான கிவ் மீது ரஷ்ய வான்படைகள் நடத்திய தாக்குதலில் 41 வயதான பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை உக்ரைன் தலைநகர் கிவ் மீது ரஷ்யா இரண்டு வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் நேற்று மஸ்கோவுக்கு வடமேற்கே உள்ள எண்ணெய் குழாய் உக்ரைன் படைகளின் தாக்குதலில் வெடித்து சிதறியது.
இந்நிலையில் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனிய பகுதிக்குள் ரஷ்ய இராணுவம் மற்றும் பொதுமக்கள் நடமாட்டத்தை உறுதி செய்ய எல்லை பாதுகாப்பை பலப்படுத்துமாறு ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார்.
உக்ரைனின் கெர்சன், ஜபோரிஜியா, லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க் ஆகிய நான்கு பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பதாக கடந்த செப்டம்பர் மாதம் புதின் அறிவித்தார்.
இதற்கிடையே உக்ரைனில் ரஷ்யா ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் எதிர்த்தாக்குதல் நடத்த தயார் என்று உக்ரைன் நேற்று அறிவித்தது.
இந்த நிலையில்தான் எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு இன்று ரஷ்ய அதிபர் புதின் இராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.