கொழும்பில் ஏலக்காய் திருட்டு: மூவர் கைது !!
கொழும்பு துறைமுக வளாகத்துக்குள் வைக்கப்பட்டிருந்த கொள்கலனை உடைத்து அதிலிருந்த ஏலக்காய் பெட்டிகள் ஒன்பதை திருடினர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருடப்பட்ட ஏலக்காய் தொகையின் பெறுமதி 25 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இப்பலோகம மற்றும் பண்டாரகம பகுதிகளைச் சேர்ந்த 39 வயதுக்கு உட்பட்ட மூவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்களால் திருடப்பட்ட ஏலக்காய் தொகை வைக்கப்பட்டிருந்த கொள்கலன் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களை புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.