இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய சக்தி திட்டம்!!
இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய சக்தி திட்டத்திற்கு கொரிய அரசாங்கம் 5.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.
இலங்கையில் முதலாவது மிதக்கும் சூரிய மின்சக்தி அபிவிருத்தித் திட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தில் கொரியா தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனமும் (KIAT) மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சும் இன்று கைச்சாத்திட்டதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.
சப்ரகமுவ மாகாணத்தில் சந்திரிகா ஏரி மற்றும் ஊவா மாகாணத்தின் கிரிப்பன் குளம் ஆகியவற்றில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த இரண்டு திட்டங்களும் கொரிய பொறியியல் நிறுவனத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
2024 டிசெம்பர் மாதத்திற்குள் இத்திட்டத்தை நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்தார்.