ஜனாதிபதியின் திட்டத்திற்கு சீனாவின் முழு ஆதரவு!!
இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டத்திற்கு சீன அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என சீன வெளிவிவகார பிரதி அமைச்சர் சன் வெய்டோங் தெரிவித்துள்ளார்.
சீன வெளிவிவகார பிரதி அமைச்சர் நேற்று (30) ஜனாதிபதியை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்த போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முயற்சிகளுக்கு தமது அரசாங்கம் ஆதரவளிப்பதாக சீன வெளிவிவகார பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கை எதிர்கொள்ளும் இக்கட்டான காலப்பகுதியில் சீனா வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சீன பிரதி வெளிவிவகார அமைச்சர் சன் வெய்டோங்கிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை ஆராய சீனா ஆவலுடன் இருப்பதாகவும் சீன வெளிவிவகார பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் பணிமனைகளின் பிரதானி சாகல ரத்நாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.