உக்ரைன் தலைநகரில் ரஷியா படை குண்டு வீச்சு- 3 பேர் பலி!!
உக்ரைன் மீது ரஷியா கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சண்டையில் ஏராளமானோர் உயிர் இழந்து உள்ளனர். ஆனாலும் இந்த போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷிய படைகள் சரமாரியாக தாக்குதல் நடத்தி வருகிறது.
இன்று அதிகாலை தொடர்ச்சியாக 17 முறை குண்டுகளை ரஷியா வீசியது. இந்த வான்வெளி தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் இறந்து விட்டனர். ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டு வீச்சில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம், மருத்துவமனை உள்ளிட்ட கட்டிடங்கள் கடுமையாக சேதம் அடைந்தது.