ராஜஸ்தானில் முதல் 100 யூனிட்டுகளுக்கு கட்டணமில்லா மின்சாரம்- முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவிப்பு !!
ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்கவும், பாஜக ஆட்சியை பிடிக்கவும் வியூகம் வகுத்து வருகிறது. இந்நிலையில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் முதல் 100 யூனிட்டுக்கு இனி கட்டணம் செலுத்த வேண்டாம் என அறிவித்துள்ளார். இதுகுறித்து அசேக் கெலாட் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ” பணவீக்க நிவாரண முகாம்களை பார்வையிட்டேன்.
பின்னர் பொதுமக்களிடம் பேசிய பிறகு, மின்கட்டணத்தில் சிலாப் வாரியான விலக்குகளில் சிறிது மாற்றம் செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டது. பொதுமக்களிடமிருந்தும் கருத்துகள் பெறப்பட்டன. அதன் அடிப்படையில் பெரிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 100 யூனிட்டுகள் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். 100 யூட்டுகள் பயன்படுத்துவோர் இனி கட்டணம் செலுத்த தேவையில்லை. 200 யூனிட்டுகள் வரை நிலையான கட்டணம் வசூலிக்கப்படும் மற்றும் தாமத கூடுதல் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், அரசின் இந்த அறிவிப்பு தேர்தலை குறிவைத்தது என பாஜக விமர்சனம் செய்துள்ளது.