அமெரிக்காவின் அடுத்த அதிபர் தேர்தல் – வெளியான கணிப்புக்கள்..!
அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ், அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகி வருகிறார்.
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 63 வயதான மைக் பென்ஸ் 2017 முதல் 2021 வரை அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கீழ் துணை அதிபர் பதவியை வகித்தவர்.
இவ்வாறான நிலையில், குடியரசுக் கட்சியின் வேட்பாளர் நியமனத்தைப் பெறுவதற்கான பிரசாரங்களை எதிர்வரும் 7 ஆம் திகதி அவர் ஆரம்பிக்கவுள்ளார் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதேசமயத்தில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பும் அடுத்த தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
புளோரிடா மாநில ஆளுநர் ரொன் டிசான்டிஸ், ஐ. நாவுக்கான முன்னாள் தூதுவர் நிக்கி ஹாலே முதலானோரும் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் நியமனத்தைப் பெறுவதற்கு போட்டியிடுகின்றனர்.
இதேவேளை, நியூ ஜேர்ஸி முன்னாள் ஆளுநர் கிறிஸ் கிறிஸ்டியும் அடுத்தவாரம் இப்போட்டியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.