நயினாதீவு அம்மன் மகோற்சவத்தை முன்னிட்டு பந்தற்கால் நாட்டும் நிகழ்வு!! (PHOTOS)
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் எதிர்வரும் 19ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
அந்நிலையில் பந்தல்கால் நடும் நிகழ்வு இடம்பெற்றது. காலை இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து பந்தற்கால் நடும் நிகழ்வு இடம்பெற்றது. அதனை தொடர்ந்து அம்மன் வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.