கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டு நிறைவையொட்டிய ஆய்வரங்கு!!
கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டு நிறைவையொட்டி இடம்பெறும் ஆய்வரங்கில் பங்குபெற விரும்புபவர்களிடம் இருந்து ஆய்வு முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளன. ஆசிரிய கல்வி என்ற தொனிப்பொருளில் அமையுமாறு ஆய்வுக்கட்டுரை முன்மொழிவுகளை ஏ4 தாளின் ஒரு பக்கத்தில் அமையுமாறு யுனிகோட்டில் தட்டச்சு செய்து எதிர்வரும் 30.06.2023 இற்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும் மேலதிக விபரம் தேவைப்படுவோர் 0770761177 என்ற தொடர்பிலக்கத்தில் ஆய்வரங்க இணைப்பாளர் விரிவுரையாளர் சி.மனோகரனுடன் தொடர்பு கொள்ளுமாறும் கலாசாலை அதிபர் அறிவித்துள்ளார்.