மணல் அள்ளப்படுவதாக புகார்- கூவம் ஏரியில் அதிகாரிகள் ஆய்வு !!
கடம்பத்துார் ஒன்றியத்தில் கூவம் ஏரி உள்ளது. இந்த ஏரி மாவட்டத்திலேயே அதிக பரப்பளவு கொண்டது. போதிய பராமரிப்பு இல்லாததால் புதர் மண்டிக் கிடக்கிறது. இந்த ஏரி அருகே கண்ணுார் எல்லை பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் மணல் அள்ள கடந்த 2022-ம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால் விதிமுறையை மீறி கூவம் ஏரியில் மணல் அள்ளப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தது. இதையடுத்து திருவள்ளூர் வட்டாட்சியர் மதியழகன் தலைமையில் மப்பேடு சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கூவம் ஏரியில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் விதிமீறல் குறித்து நில அளவை செய்து வருகின்றனர்.