‘சீலை’ உடைக்காவிடின் நாளை உண்ணாவிரதம் !!
சீல் வைக்கப்பட்டு இழுத்துப் பூட்டப்பட்டிருக்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்டி கிளையை நாளை (06) திறக்காவிடின் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அந்த காரியாலயத்தின் தொடர்பாடல் அதிகாரி குமுதி வித்தான தெரிவித்துள்ளார்.
இவர் இந்த காரியாலயத்தில் கடந்த 8 வருடங்களாக தொடர்பாடல் அதிகாரியாக கடமையாற்றுகின்றார். இவரை கொழும்பு பிரதான காரியாலயத்துக்கு இடமாற்றம் செய்துவிட்டு. அவ்விடத்துக்கு வீராஜன் சுமனசேகர நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், கடந்த இரண்டு மாதங்களாக முரண்பாடான நிலைமையே ஏற்பட்டிருந்தது.
ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் எவ்விதமான முன்னறிவித்தலும் இன்றி, இந்த நியமனத்தை வழங்கியுள்ளனர். அந்த நியமனத்துக்கு எதிராக தான் தாக்கல் செய்திருந்த மேன்முறையீடு தொடர்பில் எவ்விதமான கவனமும் செலுத்தப்படவில்லை.
நிலைமை இவ்வாறு இருக்கையில், அந்த காரியாலயத்துக்கு மே.29 ஆம் திகதியன்று சீல் வைத்துள்ளனர். அத்துடன், சாவியையும் கொழும்பு தலைமையகத்துக்கு எடுத்துச் சென்றுவிட்டனர். கண்டியிலுள்ள குறித்த மனித உரிமைகள் காரியாலயத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.