பெரும் பதிலடித் தாக்குதல் முறியடிப்பு..! கொன்று குவிக்கப்பட்ட உக்ரைன் துருப்புகள் !!
உக்ரைனிய இராணுவத்தின் பெரும் பதிலடித் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக அறிவித்துள்ள ரஷ்ய இராணுவம் இந்தத் தாக்குதலில் 250 உக்ரைனியத் துருப்புக்களைக் கொன்றதாகவும் அறிக்கையிட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் 16 போர்த் தாங்கிகளை அழித்தாகவும் 21 கவச வாகனங்களை சேதப்படுத்தியதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
மேற்குலநாடுகளின் உதவியுடன் உக்ரைன் பல மாதங்களாக தனது எதிர் தாக்குதலை திட்டமிட்டிருந்த நிலையில், நேற்று டொனெற்ஸ் பிராந்தியத்தில் இந்த பெரிய தாக்குதல் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயினும் இந்தத் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக உரிமை கோரிய ரஷ்யா சில விபரங்களையும் வெளியிட்டுள்ளது.
ஆனால் ரஷ்யாவின் இந்தஉரிமைகோரல் குறித்து உக்ரைனிய தரப்பில் இருந்து அதிகளவான விபரங்கள் வெளியிடப்படவில்லை.
உக்ரைனிய தரப்பில் போர்த்தாங்கிகளை கொண்ட இரண்டு படைப்பிரிவுகள் உட்பட்ட 8 படைப்பிரிவுகள் ஈடுபடுத்தப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமது பாதுகாப்பு முன்னரங்கங்களை உடைக்க முயன்ற உக்ரைனிய படையினரின் முயற்சி முறியடிக்கபட்டபோது, அவர்களின் தரப்பில் 16 போர்த்தாங்கிகள் அழிக்கப்பட்டதாகவும் 21 கவச வாகனங்கள் சேதபபடுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ள ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், தமது ரெலிகிராம் காணொளி பிரிவால் சில காணொளிகளையும் வெளியிட்டுள்ளது.
இந்தக் கணொளிகளில் உக்ரைனிய கவச வாகனங்கள் சில தாக்கப்படும் காட்சிகள் தெரிகின்றன.
இதேபோல ரஷ்ய இராணுவம் கடந்த சனி முதல் ஞாயிறு இரவு வரை உக்ரைனிய இராணுவ விமான நிலையங்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும் தெரிகிறது.