போராட்டத்துக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு !!
மாகாண சபைத் தேர்தலை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தி இன்று (08) முதல் தொடர் போராட்டத்தை முன்னெடுக்க தேசிய மக்கள் சக்தி (NPP) திட்டமிட்டுள்ளது.
ராஜகிரியவில் உள்ள தேர்தல் செயலக வளாகத்துக்கு முன்பாக முதலாவது எதிர்ப்பு ஊர்வலம் ஆரம்பிக்கப்படும் என, ஜே.வி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி கூறியுள்ளார்.
இந்த நிலையில், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க உட்பட மொத்தம் 26 நபர்களுக்கு எதிராக புதன்கிழமை ( 07) தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர வீதி, கோட்டா வீதி மற்றும் சரண வீதி ஊடாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தேர்தல் செயலகத்திற்குள் பிரவேசிப்பதை தடை செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என கூறப்படுகின்றது.
வெலிக்கடை பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இவ்வாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும், தமது ஆர்ப்பாட்ட பேரணியை தடுக்கும் வகையில் எந்த தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸார் தமக்கு அறிவிக்கவில்லை என சுனில் ஹந்துன்நெத்தி கூறியுள்ளார்.