;
Athirady Tamil News

தனியார் கல்வி நிலைய உரிமையாளர்களுடன் யாழில் கலந்துரையாடல்!!

0

பாடசாலை கல்விக்கு மேலதிகமாக வாரத்தில் ஏழு நாட்களும் ஓய்வின்றிக் கல்விச் செயற்பாட்டில் ஈடுபடுவதனால் மாணவர்களுக்கும் சமுதாயத்திற்கும் ஏற்படும் சாதக மற்றும் பாதக விளைவுகளும் எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்களும் தொடர்பாக தனியார் கல்வி நிலையங்களுக்கான கலந்துரையாடலொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரனின் தலைமையில் நாளை(09) காலை 09 மணி தொடக்கம் 1 மணிவரை குழுக்கலந்துரையாடல் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் சுகாதாரம்,கல்வி, மதத் தலைவர்கள், பொலிஸ், தனியார் கல்வி நிலைய நிறுவனங்கள், பெற்றோார், மாணவர்கள் போன்றோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.