குக்கரில் வேகவைத்த நபர் கைது !!
ஆண்ணொருவரும் பெண்ணொருவரும் ஒரே வீட்டில் இணைந்து வாழ்ந்துள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் இடையில் திடீர் சண்டை ஏற்பட்டுள்ளது. அதனையடுத்தே இவ்விபரீதம் ஏற்பட்டுள்ளது.
மும்பையில் தன்னுடன் இணைந்து வாழ்ந்த பெண்ணை கொலை செய்து உடலை இரண்டு துண்டுகளாக வெட்டி அதை சிறு பாகங்களாக துண்டித்து குக்கரில் வேகவைத்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அந்த வீட்டில் 56 வயதான நபர் வசித்து வந்தார். அவருடன் 36 வயது பெண் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் பொலிஸுக்கு அளித்தப் புகாரின் பேரில் பொலிஸார் அந்த ஃப்ளாட்டிற்கு வந்தனர். வீட்டை சோதனை செய்தபோது அங்கே அழுகிய நிலையில் உடல் பாகங்கள் இருந்தன.
இது தொடர்பாக இருவரை பொலிஸார்கைது செய்தனர். இந்தச் சம்பவம் குறித்து துணை ஆணையர் ஜெயந்த் பாஜ்பாலே கூறுகையில், ” பெண்ணொருவரும் ஆண்ணொருவரும் லிவ் இன் உறவில் இருந்துள்ளனர். இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் அந்தப் பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடலை மர அறுவை இயந்திரம் கொண்டு இரண்டாகத் துண்டித்துள்ளனர். பின்னர் உடலை சிறு பாகங்களாக வெட்டி அதனை குக்கரில் கொஞ்சம் கொஞ்சமாக வேக வைத்துள்ளனர் என்றனர்.
இந்தக் கொடூர கொலை தொடர்பாக அந்தப் பெண்ணுடன் வாழ்ந்தவரும் மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கொண்டு விசாரணை நடைபெறுகிறது. கொலைக்கான பின்னணியும் ஒருவர் தான் செய்தாரா இல்லை வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் நாங்கள் விசாரித்து வருகிறோம்” என்றார்.