சொகுசு கார் மீது கவிழ்ந்த லாரி- 7 பேர் பலி!!
மத்திய பிரதேசத்தில் உள்ள சித்தி மாவட்டத்தில் இன்று சொகுசு கார் மீது லாரி ஒன்று கவிழ்ந்தது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் இருவர் காயமடைந்துள்ளனர். சித்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவீந்திர சிங் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்த தகவலின்படி, இந்த விபத்து காலை 09:30 மணியிலிருந்து 10:00 மணிக்குள், டோல் கிராமத்திற்கு அருகே சித்தி-திகாரி சாலையில் நிகழ்ந்துள்ளது.
லாரி முதலில் கார் மீது மோதி பிறகு அதன் மேலேயே கவிழ்ந்துள்ளதன் விளைவாக 7 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார்.