கனடா காட்டுத் தீ ; பாதிக்கப்பட்டுள்ள நியூயோர்க் நகரம் – மக்களுக்கு எச்சரிக்கை!
கனடாவின் காட்டுத் தீயால் பரவியுள்ள புகையால் அமெரிக்காவின் நியூயோர்க் நகரம் முழுவதும் மாசுபடுவதாக கூறப்படுகிறது.
புகை மூட்டம் நியூஜெர்சியில் ஹட்சன் நதியைக் கடந்து நியூயோர்க் நகரினை மாசுபடுத்தி வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
உலகின் மிக மோசமான காற்றுமாசு டெல்லியிலும், பக்தாத்திலும் ஏற்படுவதாக கூறப்பட்ட நிலையில், நியூயோர்க்கின் காற்று மாசு அதைவிட மோசமாக மாறி வருகிறது.
தூசு, புகை மூட்டம் போன்றவை கிரேட் லேக்ஸ் பகுதியில் இருந்து வானம் முழுவதும் பரவியதால் நியூயோர்க் நகரில் உள்ள மக்களை வீடுகளில் இருக்கும்படி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.