கனடா செல்வோருக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு – குடும்பத்துடன் செல்ல அரிய வாய்ப்பு !!
கனடாவில் வாழும் புலம்பெயர்ந்தோரின் குடும்பத்தினர் விரைவாக கனடா செல்லவும், அவர்களும் கனடாவில் வேலை செய்யவும் தேவையான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, அப்படி நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பித்துவிட்டு காத்திருக்கும் அந்த குடும்ப உறுப்பினர்கள், தற்போது, தற்காலிக குடியிருப்பு விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். அது 30 நாட்களுக்குள் பரிசீலிக்கப்படும்.
கனடாவுக்கு வரும் புலம்பெயர்ந்தோரின் குடும்ப உறுப்பினர்களும் வேலை செய்யலாம் அதேபோல, கனடாவில் வாழும் புலம்பெயர்ந்தோரின் கணவன் அல்லது மனைவியும், அவர்களை சார்ந்து வாழும் பிள்ளகளும் இனி கனடாவில் வேலை செய்வது எளிதாக்கப்படவுள்ளது.
அதாவது, அவர்களுக்கு, எந்த வேலையும் செய்ய அனுமதிக்கும் வகையில், பணி அனுமதிகள் (open work permits) வழங்கப்பட உள்ளன. அவர்கள், கணவன் மனைவி அல்லது பிற குடும்ப வகை நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்கும்போதே, இந்த பணி அனுமதிக்கும் விண்ணப்பிக்கலாம், அனுமதியைப் பெற்றுக்கொள்ளவும் செய்யலாம்.
மேலும், ஆகத்து 1ஆம் திகதிக்கும் 2023 டிசம்பருக்கும் நடுவில் காலாவதியாக இருக்கும் பணி அனுமதிகளை (open work permits) வைத்திருப்போர், அவைகளை 18 மாதங்களுக்கு நீட்டிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு, ஏற்கனவே கனடாவில் பணி செய்யும் 25,000 பேருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்த உள்ளது.
இந்த மாற்றங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள கனடாவின் புலம்பெயர்தல் துறை அமைச்சரான Sean Fraser, இந்த குடும்ப மறு ஒருங்கிணைப்பு என்பது வெறும் கருணையின் அடிப்படையில் செய்யப்படுவது அல்ல, அது கனேடிய சமுதாயத்தின் அடிப்படைத் தூண். நாம் கனடாவில் வாழும் புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களை அவர்களுடன் இணைக்கும் அதே நேரத்தில், அவர்கள் வேலை செய்யவும் அனுமதிக்கிறோம்.
அப்படிச் செய்வதன் மூலம் அவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த நாம் வாய்ப்பளிக்கும் அதே நேரத்தில், அவர்களால் கனடாவின் பொருளாதாரமும் சமுதாயமும் வலுப்படவும் அது வழிவகை செய்கிறது என்றார்.