;
Athirady Tamil News

ஆப்கான் மாகாண துணை ஆளுநரின் இறுதிச்சடங்கில் குண்டு வெடிப்பு- 11 பேர் உயிரிழப்பு !!

0

ஆப்கானிஸ்தான் மாகாண ஆளுநர் அகமது அஹ்மதி கொலைக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு. குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்கிற அச்சம் இருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வடக்கு ஆப்கானிஸ்தான் பைசாபாத்தில் உள்ள நபாவி மசூதி அருகே தலிபான் மாகாண துணை ஆளுநரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நேற்று நடந்துக் கொண்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் உள்பட முக்கிய தலைவர்கள் பலர் பங்கேற்றனர். இந்நிலையில், அங்கு திடீரென குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஆப்கானிஸ்தான் மாகாண ஆளுநர் அகமது அஹ்மதி தற்கொலை படை தாக்குதலால் படுகொலை செய்யப்பட்டார். இவரது கொலைக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இதில் அகமது உள்பட அவரது கார் ஓட்டுனரும் கொல்லப்பட்டார். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர் இவரது இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நேற்று நடைபெற்ற நிலையில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்கிற அச்சம் இருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.