கடந்த 9 ஆண்டுகளில் நடுத்தர மக்களின் கனவுகளை பிரதமர் மோடி நிறைவேற்றினார்- அமித்ஷா டுவிட்டர் பதிவு!!
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனது டுவிட்டர் பதிவில் இன்று கூறியிருப்பதாவது:- பிரதமர் நரேந்திரமோடி கடந்த 9 ஆண்டுகளில் புதிய கல்வி நிறுவனங்களை திறந்தும், மானிய விலையில் வீடுகள் வழங்கியும், லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியும், நடுத்தர மக்களின் கனவுகளை நிறைவேற்றி உள்ளார்.
மோடி அரசின் 9 ஆண்டு கால ஆட்சியில் நடுத்தர மக்களின் நிதிநிலை வேகமாக உயர்ந்துள்ளது. ரூ.7 லட்சம் வரையிலான வரிச்சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. மலிவு விலையில் மருந்துகள் வழங்கப்படுகிறது. காப்பீடு, மலிவான பயணம் என பிரதமர் மோடி நடுத்தர வர்த்தகத்தினரை நிதி ரீதியாக ஆதரித்து வருகிறார். இவ்வாறு அமித்ஷா கூறி உள்ளார்.