11 மாணவர்களுக்கு வகுப்புத்தடை!!
பேராதனைப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் புதிய மாணவர் குழுவை துன்புறுத்தி, பகிடிவதைக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் அப்பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் 11 பேருக்கு தற்காலிக வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தரும் ஊடகப் பேச்சாளருமான பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்தார்.
முகாமைத்துவ பீடத்துக்கு புதிதாக சேர்க்கப்பட்ட மாணவர்கள் தங்கியிருந்த விடுதிக்குச் சென்று அங்கு தங்கியிருந்த மாணவர்களை பகிடி வதைக்கு உட்படுத்தியதாக செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், 11 மாணவர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, தற்காலிகமாக வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் மேலும் தெரிவித்தார்.