ரஷ்ய – உக்ரைன் போரை விட உலகிற்கு ஆபத்தான செய்தி !!
சீனா தாய்வான் மீது போர் தொடுக்கப் போவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்ய- உக்ரைன் போரை விட இப்போர் ஆபத்தான போராக அமையும் என போரியல் நிபுணர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தாய்வான் மீது சீனா போர் தொடுக்குமாக இருந்தால், உலகப் பொருளாதாரத்தில் மிகப்பெரியளவிலான தலைகீழ் மாற்றங்கள் வரலாம்.
அத்துடன், ஆசியாவைச் சேர்ந்த நிக்காய் எனும் அமைப்பு இதுதொடர்பில் தெரிவிக்கையில், 2.6 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்கள் நஷ்டத்தை உலகப்பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் எனவும், உலகப்பொருளாதாரம் தாய்வானை சார்ந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
குறிப்பாக தாய்வான் ஜிப்சம் தயாரிப்பில் முக்கிய நாடாக இருப்பதனால், போர் ஏற்பட்டால், உலகப்பொருளாதாரம் சரிவை நோக்கி செல்லும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் பிரித்தானியாவின் ஆயுதப்படை மற்றும் படைவீரர்களுக்கான அமைச்சர் ஜேம்ஸ் தெரிவிக்கையில், பிரித்தானியாவிற்கான கடல்வழி பயணத்தின் முக்கிய தளமாக தாய்வான் காணப்படுவதனால் ஐரோப்பாவின் பொருளாதாரம் ஸ்தம்பிதமடையும் என தெரிவித்துள்ளார்.
மேலும், சீனா தாய்வான் தனித்தனியாக பிரிந்து செல்லும் போது மேற்கத்தேய நாடுகளுடன் சுமார் 30 ஆண்டுகளாக நாங்கள் அவர்களுடன் போர் தொடுக்கப் போவதில்லை, பேச்சுவார்த்தை மூலமாகவே அனைத்து விவகாரங்களும் மேற்கொள்ளப்படும்” என தெரிவித்துள்ளது.
ஆனால் தற்பொழுது தாய்வானை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை மேற்கத்தேய நாடுகள் செய்யும் போது, பேச்சு வார்த்தை எனும் நிலைப்பாடு மாறி இது போருக்கு வழிவகுக்கும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.