88 தடவைகள் இரத்ததானம் செய்து சாதனை படைத்த நயினாதீவைச் சேர்ந்த துரைமணி ரமணன்!! (PHOTOS)
உலக குருதிக்கொடையாளர் தினத்தை முன்னிட்டு நேற்று கொழும்பு தேசிய இரத்த மத்திய நிலையத்தில் கௌரவிப்பு நிகழ்வொன்று இடம்பெற்றது.
இந் நிகழ்வில் இதுவரை 88 தடவைகள் இரத்ததானம் செய்து சாதனை படைத்த நயினாதீவைச் சேர்ந்த துரைமணி ரமணன் தேசிய ரீதியாக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இதையடுத்து அவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்தவண்ணமுள்ளமை குறிப்பிடத்தக்கது.