வறுமையான தீவில் சாதித்த இளம் மருத்துவர் !!
அகுடா தீவுக்கூட்டம் இது பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பிலிப்பைன்ஸ் நாட்டிற்க்கு சொந்தமான மிக வறுமையான தீவுப் பகுதி ஆகும்.
இத்தீவில் வாழும் சுமார் 13 000 மக்களுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரேயொரு மருத்துவர்தான் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்தான், 28 வயதான அலெனா யாப் என்பவர்.
பிலிப்பைன்ஸின் உயரிய மருத்துவக் கல்லூரியில் படித்த அவர், ஓர் அரசு மருத்துவத் திட்டத்தில் தன்னார்வலராகச் சேர்ந்து, நாட்டின் மிக வறுமையான பகுதிக்கு அனுப்பப்பட்டார்.
பின்தங்கிய நிலையில் கவனிப்பாரற்றுக் காணப்படும், இந்தத் தீவுக்கு அவர் வந்து சேர்ந்தபோது கொவிட் தொற்றுப் பேரிடரோடு சேர்த்து வேறு பல பிரச்சினைகளையும் சமாளிக்க வேண்டியிருந்தது.
கொவிட் தொற்றுக் காலப்பகுதியில் தீவுப்பகுதிக்கு வந்த அவர், மக்களை சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு கூறியபோது, “மக்கள் தன்னைச் சுட்டுக் கொல்லப் போவதாகச் சொன்னார்கள்” என குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், காலம் செல்ல செல்ல மக்களுக்கும் சூழலுக்கும் தன்னை பழக்கப்படுத்திக்கொண்ட அலெனா அங்கு தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் பணியாற்றினார்.
குறிப்பாக, கொவிட் காலப்பகுதியில் அப்பகுதியில் 08 பேர் மட்டுமே உயிரிழந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
குறிப்பாக எல்லா நிலைகளிலும் பின்தங்கிய நிலையில் காணப்பட்ட அம்மக்களுக்கு தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வினை வழங்கி அவர்களின் உயிரை காப்பாற்றிய பெருமையும் இவரையே சாரும்.
அகுடா தீவில் ஊழலில் மூழ்கியிருக்கும் சுகாதாரத் துறைக்கு மத்தியில், மூன்று வருடங்கள் கடமையாற்றிய அவர் “இந்தக் குறுகிய காலத்தில் ஒன்றும் பெரிதாகச் செய்துவிட முடியவில்லை” என தெரிவித்திருந்தார்.
தற்போது, இன்னுமொரு அரசாங்க வேலைவாய்ப்பை மறுத்துவிட்டு, ஒரு தன்னார்வ நிறுவனத்திற்கு வேலை செய்து அதன் மூலம் அகுடா தீவுகளில் இருக்கும் மக்களுக்கு சிறிய அறுவை சிகிச்சைகளைச் செய்ய மருத்துவர்களை அனுப்பி வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.