உக்கிர மோதல்! 10 கிலோமீட்டர் வரை முன்னேறிய துருப்புக்கள் – ரஷ்யா பதிலடி !!
ரஷ்யப் படைகளுக்கு எதிரான எதிர்த்தாக்குதலில் தமது படைகள் 10 கிலோமீட்டர் வரை கட்டுப்படுத்திவிட்டதாக உக்ரைனிய மூத்த இராணுவத் தளபதி ஜெனரல் ஒலெக்சி ஹ்ரோமோவ் கூறியுள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து யுத்த களநிலவரங்களை தெரிவிக்கையில், மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
“எங்கள் பிரதேசத்தை விடுவிப்பதற்காக நாங்கள் தொடர்ந்து போராட தயாராக உள்ளோம்.
சபோரிஜியா பிராந்தியத்தில் உள்ள மாலா டோக்மாச்கா கிராமத்திற்கு அருகே 3 கிமீ (1.8 மைல்) முன்னேறியதாகவும், டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் வெலிகா நோவோசில்காவுக்கு தெற்கே உள்ள கிராமத்திற்கு அருகே 7 கிமீ வரை முன்னேறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, உக்ரைனின் எறிகணைத் தாக்குதலில் குழந்தையொன்று கொல்லப்பட்டதாக ரஷ்ய அரசுக்கு சொந்தமான TASS செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலடியாக, ரஷ்ய ஏவுகணைகள் மத்திய உக்ரைனிய நகரமான Kryvyi Rih இல் இரண்டு தொழிற்சாலைகளை தாக்கியுள்ளன.
இத்தாக்குதலில் வயதான பெண்ணொருவர் கொல்லப்பட்டதாக உக்ரைனின் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.