காற்றின் ஈரப்பதத்தில் இருந்து 24 மணி நேர மின்சாரம் உற்பத்தி – பிரிட்டன் விஞ்ஞானிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு !!
காற்றின் ஈரப்பதத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழிநுட்பத்தை பிரிட்டனின் யுமாஸ் ஆம்ஹெர்ஸ்ட் கண்டறிந்துள்ளது.
மின்சாரம் அனல், நீர், காற்றாலை, சோலர், அணு என பலவழிகளிலும் உற்பத்தி செய்ப்பட்டாலும், காற்றாலை சோலர் தான் புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி.
அத்துடன், இது சுற்றுச்சூழலுக்கும் உகந்தொன்றாக காணப்படுகின்றது.
இதன்படி ஏதாவது ஒரு பொருளுடன் 100 நானோமீட்டர் விட்டம் கொண்ட ‘நானோபோர்ஸ்’ஐ பயன்படுத்தி காற்றின் ஈரப்பதத்தில் இருந்து தொடர்ந்து மின்சாரம் தயாரிக்க முடியும்.
ஒரு நானோமீட்டர் என்பது 100 கோடி மீட்டரில் ஒன்று அல்லது நம் தலைமுடியின் அகலத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு அளவுக்கு மிக நுண்ணியது.
இதன்படி, ‘நானோபோர்ஸ்’ என்பது புரோட்டின் அல்லது செல்களால் இயற்கையாக உருவான நானோமீட்டர் அளவீடு துளைகள் ஆகும்.
இதுகுறித்து யுமாஸ் பல்கலை பேராசிரியர் ஜூன் யாவ் கூறும்போது,
“காற்றில் பெரிய அளவில் மின்சாரம் கலந்திருக்கிறது. மேகத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இதில் முழுவதும் நீர்த்துளிகள்தான் உள்ளன.
ஒவ்வொன்றும் ஒரு மின்னூட்டத்தைக் கொண்டிருக்கின்றன. மேகங்கள் ஒன்றோடொன்று உரசும்போது மின்னுாட்டம் பெறுகிறது.
எதிரெதிர் மின்னூட்டம் பெற்ற மேகங்கள் அருகருகே வரும்போது காற்றின் வழியாக மின் பரிமாற்றம் ஏற்படும்.
அப்போது ஒளிக்கீற்றான மின்னல் மரங்களின் வழியே நிலத்தில் பாய்கிறது. ஆனால் மின்னலில் இருந்து மின்சாரத்தை பெறும் தொழிநுட்பத்தை இன்னும் கண்டறியவில்லை என தெரிவித்துள்ளார்.
அத்துடன், எங்கள் குழு உருவாக்கிய ‘நானோபோர்ஸ்’சால் நுண்ணிய துளை வழியாக நீர் மூலக்கூறுகள் (ஈரப்பதம்) பொருளின் மேற்பகுதியில் இருந்து கீழ் பகுதிக்குச் செல்லும்போது துளையின் விளிம்பில் மோதும் என தெரிவித்திருந்தார்.
இதன்போது, அடுக்கின் மேல் பகுதி, கீழ் பகுதியை விட அதிக மின்சுமை தாங்கும் மூலக்கூறுகளால் மோதும் என்பதால், இந்த வித்தியாசம் ஒரு பட்டரியை உருவாக்கும்.
இது காற்றில் ஈரப்பதம் இருக்கும் வரை மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என தெரிவித்துள்ளார்.
எந்தளவு (மெகாவாட்) மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்ற விபரம் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், சோலர், காற்றாலை மின்சாரத்தில், குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தான் உற்பத்தி செய்யப்படும். ஆனால் காற்றின் ஈரப்பதத்தில் இருந்து 24 மணி நேரமும் மின்சாரம் உற்பத்தி செய்யலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.