;
Athirady Tamil News

பிரான்ஸின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளங்கள் – மெய்சிலிர்க்கும் சிறப்புக்கள் !!

0

அதிக சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் இடங்களை கொண்ட நாடுகள் பட்டியலில் பிரான்ஸ் மிக முக்கிய நாடாக உள்ளது.

இங்கு பலவிதமான மக்களை ஈர்க்கும் வகையிலான நகரங்களும், கிராமங்களும் இருக்கின்றன. இதனை பார்ப்பதற்காக பல சுற்றுலாப்பயணிகள் பிரான்ஸை நோக்கி செல்கிறார்கள்.

அவ்வாறு பிரான்ஸில் உள்ள பிரசித்திபெற்ற இடங்களை பற்றி பார்ப்போம்.

ஈபிள் கோபுரம் (Eiffel Tower)

உலகின் மிக முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்று Eiffel Tower.

பாரிஸ் என்றதுமே நாம் நினைவுக்கு வருவது கம்பீரமான அதிசயமான Eiffel Tower தான். 1889ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த கோபுரம் முழுவதுமே இரும்பால் ஆனது.

5 பில்லியன் விளக்குகளால் ஜொலிக்கும் Eiffel Tower 4வது அதிசயமாக பார்க்கப்படுகிறது, வருடந்தோறும் 7 மில்லியனுக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் பார்வையி்டடு செல்கின்றனர்.

ஆர்லஸ் (Arles)

யுனெஸ்கோவால் பாரம்பரிய இடமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள சுற்றுலா தளம் ஆர்லஸ் விளங்குகின்றது.

ரோன் நதி இரண்டாக பிளந்து கடலை சந்திக்கும் மலையுச்சியில் அமைந்துள்ள வரலாற்று நகரம் இதுவாகும்.

அதேசயம் கடைகள், உணவகங்கள் என உணவு பிரியர்களுக்கு நிச்சயம் விருந்தளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கோர்சிகா (Corsica)

மத்திய தரைக்கடலில் அமைந்துள்ள பிரமிக்க வைக்கும் தீவு Corsica, பிரான்ஸ் மற்றும் இத்தாலிக்கு இடையே அமைந்திருப்பதால் இரண்டு நாடுகளின் கலாசாரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

மாவீரன் நெப்போலியனின் பிறந்த இடமான இதனை அழகின் தீவு என்றும் அழைக்கலாம், நாகரீகமான கடற்கரை நகரங்கள், பழுதடையாத காடுகள் என இத்தீவிற்கு மேலும் அழகு சேர்க்கின்றன.

ஸ்கூபா டைவிங்கிற்கு பெயர் பெற்ற இடமும் இதுவே.

லோயர் பள்ளத்தாக்கு (The Loire Valley)

பிரான்சின் தோட்டம் என்றழைக்கப்படும் The Loire Valley, பிரெஞ்சு அரசர்களுக்கு சொந்தமாக இருந்து தற்போது புகழ்பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றாகிவிட்டது

யுனெஸ்கோவின் பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இது தனக்கென்று தனித்துவமான வரலாற்றையும் பெற்றுள்ளது என்றால் மிகையல்ல.

மான்கள் அதிகம் நிறைந்த பூங்காவும் இதற்கு மேலும் அழகு சேர்க்கிறது, கட்டிடக்கலையும் நிச்சயம் உங்களை வியப்பூட்டும்.
செயிண்ட்- ட்ரோபஸ் (Saint-Tropez)

நீங்கள் ஆடம்பரமான வாழ்க்கையை ருசிக்க விரும்பினால் நிச்சயமாக சென்று வர வேண்டிய இடம் Saint-Tropez.

எல்லாவற்றிக்கும் மேலாக பிரெஞ்சு ரிவீரியாவில் உள்ள பிரமிக்க வைக்கும் ஆடம்பரமான கடைகள், மணற் கடற்கரைகள் மற்றும் படகு பயணத்தை மேற்கொள்ளலாம்.

மீன்பிடி கிராமமாக இருந்ததை 19ம் நூற்றாண்டுக்கு பின்னர் சொர்க்கபூமியாக மாற்றியதே புகழ்பெற்ற ஓவியர்களால் தான்.

லோவுர் அருங்காட்சியகம் (Louvre Museum)

3000க்கும் மேற்பட்ட கலைப்படைப்புகளை கொண்ட முன்னாள் அரச அரண்மனையே இதுவாகும்.

குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் முதலாம் நூற்றாண்டை சேர்ந்த Venus De Milo, லியோனார்டோ டாவின்சியின் மோனாலிசா மற்றும் Veronese’s Wedding Feast ஆகியவற்றை கூறலாம்.

இது உலகின் மிகப்பெரிய கலை அருங்காட்சியகம் என்பதையும் தாண்டி மிகப்பழமையான கட்டிடங்களில் ஒன்றாகும்.

300 ஆண்டுகள் வரலாற்றை கொண்ட இதனை மக்கள் தங்கள் வாழ்நாளில் ஒருதடவையாவது பார்வையிட்டு செல்ல வேண்டும்.

ரான்சில் சுற்றுலா பயணிகள் அவசியம் பார்க்க வேண்டிய இடம் Champagne,

வடகிழக்கு பிரான்சின் அதாவது பாரிஸில் இருந்து 1.5 மணிநேர பயண தூரத்தில் அமைந்திருக்கிறது.

வசீகரிக்கும் இயற்கை தோட்டங்களுக்கு மத்தியில் சூரிய அஸ்தமனத்தை பார்வையிடுவதற்காகவே இங்கு சென்று வரலாம்.

அதுமட்டுமா பிரான்சின் தனித்துவமான தயாரிப்பை சுவைக்கும் விரும்பும் நபர்களுக்கு இது நிச்சயம் விருந்தளிக்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.