யாழ் பல்கலைக்கழக இளம்பொருளியலாளர் மன்றத்தினால் குருதிக்கொடை!! (PHOTOS)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக, கலைப்பீடத்தைச் சேர்ந்த பொருளியல் துறையின் இளம்பொருளியலாளர் மன்றத்தினால், ஜுன் 14 ஆம் திகதி உலகக் குருதிக்கொடைத் தினத்தையொட்டி குருதிக்கொடை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பெரும்பொருளாளர் டெல்சியா கிறிஸ்டியன் மற்றும் துறைத்தலைவர் கலாநிதி. க.கருணாநிதி ஆகியோரின் வழிகாட்டலில், யாழ். போதனா வைத்தியசாலையைச் சேர்ந்த வைத்தியர்கள் மேற்பார்வையில் நடந்தேறிய இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.
அனைத்துப்பீடங்களையும் சேர்ந்த மாணவ, மாணவியர் இன, மத, மொழி பேதமின்றிக் கலந்து கொண்டமையும், அரியவகைக் குருதியினங்களைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தமையும் இங்கு குறிப்பிட்டுக் கூறத்தக்கதாகும்.