சிறப்புற இடம் பெற்ற சரா புவனேஸ்வரனின் மணிவிழா!! (PHOTOS)
இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் எனப் பல தளங்களில் பணி செய்த சரா. புவனேஸ்வரனின் மணிவிழா 18.6.23 ஞாயிறு காலை 9 .30 மணிக்கு நல்லூர் சயன்ஸ் அக்கடமி மண்டபத்தில் நடைபெற்றது
லயன் வை. தியாகராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எல். இளங்கோவன், வடக்கு மாகாண கல்வி பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம. பிரதீபன் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை அதிபர் ச. லலீசன் வவுனியா பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் மோகனதாஸ் உள்ளிட்ட பலர் வாழ்த்துரைகளை வழங்கினர்
நிகழ்வில் ஆரம்பக் கல்வி மாணவர்களுக்கென சரா புவனேஸ்வரனால் எழுதப்பட்ட ஐந்து நூல்கள் வெளியிட்டு வைக்கப்பட்டன
சரா புவனேஸ்வரன் மணிவிழா சபையினரால் பல்துறை வித்தகர் என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்
பல்வேறு ஆக்கங்களைத் தாங்கிய மணிவிழா மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டது இதனை லயன் வை. தியாகராஜா , மேலதிக அரச அதிபர் பிரதீபன் , கலாசாலை அதிபர் லலீசன் ஆகியோர் இணைந்து வெளியிட்டு வைத்தனர் . விழா நாயகரின் பேரக்குழந்தை நூலின் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.
படங்கள்: ஐ.சிவசாந்தன்