வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதையில் வெள்ளம்- போக்குவரத்து நிறுத்தம் !!
சென்னையில் ஒருநாள் பெய்த மழைக்கே பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. மாநகராட்சி சுரங்கப் பாதையில் மழைநீர் இந்த முறை தேங்கவில்லை என்றாலும் வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதையில் திடீரென மழை வெள்ளம் சூழ்ந்தது. காலை 8 மணி வரை அந்த பாலம் வழியாக போக்குவரத்து நடைபெற்றது. தொடர்ந்து பெய்த மழையால் அப்பகுதியை ஒட்டிய இடங்களில் இருந்து மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி சுரங்கப்பாதையில் தேங்கியது.
இதனால் போக்குவரத்து தடை செய்யப்பட்டன. சுரங்கப் பாதையின் வழியாக இரு சக்கர வாகனங்கள், கார், லாரி, ஆட்டோ மற்றும் பஸ் போக்குவரத்து எதுவும் நடைபெறவில்லை. அங்கு சூழ்ந்துள்ள தண்ணீரை மோட்டார் பம்ப் செட் மூலம் வெளியேற்றும் பணியை மாநகராட்சி முடுக்கி விட்டுள்ளது. வியாசர்பாடி சுரங்கப்பாதையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் பெரம்பூர், பேசின்பாலம் வழியாக மக்கள் சென்றார்கள்.