’’திப்பு சுல்தான்’’ வந்தடைந்தது !!
சீனாவிலிருந்து பாகிஸ்தான் நோக்கி செல்லும் பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் “திப்பு சுல்தான்” அதனது ஆரம்பப்பயணத்தில் 3 நாட்கள் நல்லெண்ணப் விஜயமாக கொழும்பு துறைமுகத்தை ஞாயிற்றுக்கிழமை (18) வந்தடைந்தது.
“திப்பு சுல்தான்” கப்பலானது சீனாவின் Hudong Zhonghua Shipbuilding நிறுவனத்தால் கட்டப்பட்ட போர்க் கப்பளாகும். 2023 மே 10ம் திகதி அன்று சீனாவின் ஷாங்காய் நகரில் பாகிஸ்தான் கடற்படையினால் கப்பல் பொறுப்பேற்கப்பட்டதுடன் அதன் முதல் கட்டளை அதிகாரியாக கேப்டன் ஜவாத் ஹுசைன் பொறுப்பேற்றார்.
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததும், இலங்கை கடற்படையினரால் வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கையில் தங்கியிருக்கும் நாட்களில், கப்பலின் கட்டளை அதிகாரி , இலங்கை கடற்படையின் மூத்த கடற்படை அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடுவார்.
மேலும், இரு கடற்படைகளுக்கும் இடையில் பரஸ்பர செயற்பாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு , ஜூன் 20 ஆம் திகதி கொழும்பில் இருந்து புறப்படும் தினத்தில் இலங்கை கடற்படையுடன் பயிற்சி நடவடிக்கையும் நடைபெறும்.