நியூசிலாந்தில் ஓட்டலில் கோடாரியுடன் புகுந்து மர்ம நபர் தாக்குதல்- 4 பேர் காயம்!!
கோடாரியுடன் புகுந்து மர்ம நபர் தாக்குதல்- 4 பேர் காயம் ByMaalaimalar .20 ஜூன் 2023 10:21 AM (Updated: 20 ஜூன் 2023 10:21 AM) மர்ம நபர் ஒருவர் கையில் கோடாரியுடன் புகுந்து தாக்குதல் நடத்தினார். ஓட்டலில் இருந்தவர்கள் அலறியடித்து கொண்டு ஓடினார்கள். நியூசிலாந்தில் ஆக்லாந்து நகரில் மூன்று சீன உணவகங்கள் உள்ளனர். இங்கு நேற்று இரவு ஏராளமானோர் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் கையில் கோடாரியுடன் புகுந்து தாக்குதல் நடத்தினார்.
ஒவ்வொரு உணவகத்துக்குள் சென்று வாடிக்கையாளர்களை சரமாரியாக தாக்கினார். இதனால் ஓட்டலில் இருந்தவர்கள் அலறியடித்து கொண்டு ஓடினார்கள். இந்த தாக்குதலில் 4 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்தக்கு விரைந்து வந்து தாக்குதல் நடத்திய நபரை பிடித்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தாக்குதல் நடத்திய 24 வயது வாலிபரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மற்ற விவரங்களை தெரிவிக்க மறுத்து விட்டனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.