முட்டைப் பிரச்சினைக்கு தீர்வு!!
இலங்கையில் நிலவும் கோழி முட்டை தொடர்பான பிரச்சினைகளுக்கு நீண்ட கால தீர்வை காண நாடு முழுவதும் ஒரு இலட்சம் கோழிக்குஞ்சுகளை பகிர்ந்தளிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்ணான்டோவின் யோசனைக்கமைய இந்தத் திட்டம் கம்பஹா மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.