பசிலின் பரிந்துரையில் நாமலுக்கு அமைச்சர் பதவி!!
முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இலங்கையில் ஊடக சீர்திருத்தங்கள் தேவை என்று கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ விடுத்த கோரிக்கையின் பேரில், நாமல் ராஜபக்ச உட்பட ஆறு பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவை பதவிகள் வழங்கப்பட உள்ளதாக கூறும் செய்தி ஒன்றின் படத்தை எம்.பி நாமல் ராஜபக்ச தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பிரான்ஸ் விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பின் இந்த நியமனங்களை வழங்குவார் என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலைமைகள் ஊடகங்கள் சீர்திருத்தப்பட வேண்டியதன் அவசரத் தேவையை எடுத்துக்காட்டுவதாக மேலும் தெரிவித்தார்.
“பொதுக் கருத்தை வடிவமைக்கவும், பொறுப்பான ஊடக பாதுகாப்பு ஏன் அவசியம் என்பதை எம்மை உணர்ந்து அதை அங்கீகரிக்க வைக்கவும் அவர்களுக்கு அதிகாரம் உள்ளது!” என அவர் மேலும் தெரிவித்தார்.