திடீர் அரிப்பு காரணமாக 16 மாணவிகள் பாதிப்பு!!
ஜா-எல துடெல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் படித்துக் கொண்டிருந்த மாணவிகள் குழுவொன்று திடீரென ஏற்பட்ட கடுமையான உடல் அரிப்பு காரணமாக நேற்று (21) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
16 மணவிகளுக்கு திடீரென கை, கால் மற்றும் மார்பு பகுதிகளில் அரிப்பு ஏற்பட்டதால் அவர்களில் பத்து பேர் ஜா-எல வைத்தியசாலையிலும் மிகுதி 6 பேர் விஜய குமாரதுங்க ஞாபகார்த்த வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.
குறித்த மாணவிகளில் ஒருவரின் நிலை மோசமடைந்ததால் அவர் றாகம போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஜா-எல வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
பாடசாலை தளபாடங்களிலிருந்த கிருமிகளே இந்த திடீர் ஒவ்வாமை அரிப்பின் முக்கிய காரணமாக இருக்கலாம் என சிரேஷ்ட வைத்திய அதிகாரி லக்சிறி லொக்குலியன தெரிவித்தார்.
சம்பவத்தையடுத்து ஜா-எல சுகாதார வைத்திய அதிகாரியின் வழிகாட்டலின் கீழ் ஜா-எல பொது சுகாதார பரிசோதகர் எஸ்.ஜெயக்கொடி மற்றும் அதிகாரிகள் குழு பாடசாலையில் மருத்துவ பரிசோதனையை ஆரம்பித்துள்ளது.