முதல் முறையாக அமெரிக்காவில் செய்தியாளர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி!!
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இணைந்து இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கப் போவதாக வெள்ளை மாளிகை உறுதி செய்திருக்கிறது. Powered By VDO.AI வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித்தொடர்பாளரான ஜான் கிர்பி, “தனது சுற்றுப்பயணத்தின் இறுதியில் மோடி ஒரு பத்திரிக்கை நிகழ்ச்சியில் கலந்துகொள்வது மகிழ்ச்சியளிக்கிறது. அதை நாங்களும், மோடி அவர்களும் அவசியமானதாக நினைக்கிறோம். இது பெரிய விஷயம். செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க பத்திரிக்கையாளரின் ஒரு கேள்வி, இந்திய பத்திரிக்கையாளரின் ஒரு கேள்வி என அடுத்தடுத்து கேள்விகள் இடம்பெறும். குறைந்த அளவிலான கேள்விகளே இடம்பெறும்” என தெரிவித்தார். அமெரிக்காவில், இது போன்ற பத்திரிக்கையாளர் சந்திப்புகளில், இரு நாட்டு அதிபர்களிடமும் கேள்வி கேட்பதற்காக இரு நாட்டு பத்திரிக்கையாளர்களையும் அமெரிக்க அதிகாரிகள் தேர்வு செய்வார்கள்.
அவர்கள் ஒரு வரையறுக்கப்பட்ட முறையில் கேள்விகள் கேட்க அனுமதிக்கப்படுவார்கள். மோடி 2014ம் வருடம் பதவிக்கு வந்ததிலிருந்து இதுவரை ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தனது நாட்டுக்கு வருமாறு அரசாங்க அழைப்பை அமெரிக்கா தனது நெருக்கமான நாடுகளின் ஒரு சில தலைவர்களுக்கு மட்டுமே விடுக்கும். இந்த அரிய அழைப்பு இப்போது மோடிக்கு கிடைத்து, அவர் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மோடி இன்று மாலை அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டமர்வில் உரையாற்றவிருக்கிறார்.