பெண் அதிகாரியை மழையில் நனைய விட்டு விட்டு தன்னந்தனியாக குடை பிடித்து சென்ற பாகிஸ்தான் பிரதமர்!!
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பாரீசில் நடைபெறும் 2 நாள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று பிரான்ஸ் சென்றடைந்தார். அப்போது அங்கு மழை பெய்து கொண்டு இருந்தது. உடனே பெண் அதிகாரி, பிரதமர் வாகனத்தின் அருகே ஒருவர் குடையுடன் வந்தார். காரில் இருந்து ஷெபாஸ் ஷெரீப் இறங்கியதும் அவருக்கு பெண் அதிகாரி குடையை பிடித்தார்.
அப்போது அந்த பெண் அதிகாரியிடம் பேசிய ஷெபாஸ் ஷெரீப் பின்னர் அதிகாரியிடம் இருந்து குடையை வாங்கி அவரே குடையை பிடித்தபடி நடந்து செல்வது போன்றும், இதனால் அந்த பெண் அதிகாரி மழையில் நனைந்து செல்வது போன்றும் காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதமரின் செயல்பட்டை பாராட்டினர். ஆனால் சில பயனர்கள் பெண் அதிகாரியை மழையில் நனைய விட்டதற்காக பிரதமரை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.