கம்பஹாவில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி!!
கம்பஹா மாவட்டம், திவுலப்பிட்டிய பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (23) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த பிரதேசத்தில் மசாஜ் நிலையத்தை நடத்தி வரும் நபரே சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ஒரு பிள்ளையின் தந்தையான 28 வயதுடைய எஸ்.சஞ்சீவ என்ற நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.