ரஷ்யாவிற்காக களமிறங்கும் செசன்ய படைகள் – புடினுடன் கைகோர்க்கும் ஐரோப்பிய நாடு !!
ரஷ்யாவின் அதிபரான புடினுக்கு எதிராக திரும்பியுள்ள வாக்னர் படையின் கிளர்ச்சியை கட்டுக்குள் கொண்டுவர உதவுவதாக செச்சன் நாட்டு அதிபர் ரம்ஜான் கதிரோவ் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் வாக்னர் எனப்படும் கூலிப்படை அமைப்பு ரஷ்யாவுடன் இணைந்து உக்ரைன் மீது கொடூர தாக்குதலை நடத்தியது.
இந்த நிலையில், எவ்ஜெனி பிரிகோஜின் தலைமையிலான இந்த கிளர்ச்சி படையினர் திடீரென ரஷ்யாவுக்கு எதிராக திரும்பி அதிர்ச்சி ஏற்படுத்தியது.
இந்த சூழலில் ரம்ஜான் கதிரோவ் தெரிவித்ததாவது, எவ்ஜெனி பிரிகோஜின் தலைமையிலான புரட்சி படையின் கிளர்ச்சியை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு உதவ தயாராக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
தேவைப்பட்டால் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவவும் தயாராக இருக்கிறேன் என கூறியுள்ளார்.
மேலும், இதுபற்றி டெலிகிராமில் கதிரோவ் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், பிரிகோஜினின் நடவடிக்கைகள் முதுகில் குத்துவது போன்றுள்ளன.
ரஷ்ய படையினர் தொடர்ந்து உறுதியாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியதுடன், எந்தவித கோபமூட்டும் செயல்களுக்கும் இரையாகாமல் தவிர்த்திடல் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
பிரிகோஜின் உடன் கூட்டணியாக செயல்பட்டவர் என இதற்கு முன்பு கருதப்பட்ட கதிரோவ், புடினின் நம்பிக்கைக்குரிய ஆதரவாளராகவும் உள்ளவர். அவர், செசன்ய படைகளை தயாராக இருக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
கதிரோவ் உடன் கைகோர்த்து உள்ள செசனிய தளபதிகள், பிரிகோஜனின் பாதுகாப்பு அமைச்சிற்கு எதிரான விமர்சனங்களுக்கு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதனால், ரஷ்யாவுக்கு ஆதரவாக செசன்ய படைகள் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.